இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (07) சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்களில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான வங்கிகளில் டொலரின் விற்பனை விலை ரூ.332 அளவில் தொடர்கிறது.
செலான் வங்கி
- கொள்வனவு விலை: ரூ.324.05 – மாற்றமில்லை
- விற்பனை விலை: ரூ.333.30 – மாற்றமில்லை
NDB வங்கி
- கொள்வனவு விலை: ரூ.323.65 இலிருந்து ரூ.323.70 ஆக அதிகரிப்பு
- விற்பனை விலை: ரூ.332.65 இலிருந்து ரூ.332.70 ஆக அதிகரிப்பு
மக்கள் வங்கி (People’s Bank)
- கொள்வனவு விலை: ரூ.324.20 – மாற்றமில்லை
- விற்பனை விலை: ரூ.332.24 – மாற்றமில்லை
கொமர்ஷல் வங்கி
- கொள்வனவு விலை: ரூ.322.35 – மாற்றமில்லை
- விற்பனை விலை: ரூ.332.25 – மாற்றமில்லை
சம்பத் வங்கி
- கொள்வனவு விலை: ரூ.324.50 இலிருந்து ரூ.324.25 ஆகக் குறைவு
- விற்பனை விலை: ரூ.332.50 இலிருந்து ரூ.332.25 ஆகக் குறைவு.







