2026ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 04ஆம் திகதி வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.









