தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பிராந்திய தொழிற்சங்க பரிமாற்றம் குறித்த இருநாள் பயிலரங்கில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் அண்மையில் ஆரம்பமான இந்தப் பயிலரங்கில், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.








