ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது.
“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்குச் சுபிட்சம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, பிற்பகல் 2.00 மணிக்கு புளத்சிங்கலையிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் மக்கள் பேரணிகள் நடைபெறவுள்ளன









