ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிட்டக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை 9.00 மணிக்கு விசேட ஆண்டு நிறைவு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
1946ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பில் உள்ள ‘பாம் கோர்ட்’ மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.
அப்போது டி.எஸ். சேனாநாயக கட்சியின் தலைவராகவும், எச்.டபிள்யூ. அமரசூரிய செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
சேர் ராசிக் பரீட் மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோர் இணைப் பொருளாளர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
கட்சியின் நிறமாக பச்சையும், சின்னமாக யானையும் தெரிவுசெய்யப்பட்டன.
கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் டி.எஸ். சேனாநாயக, டட்லி சேனாநாயக, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அதன் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர்.
ரணசிங்க பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று தொடர்ந்து வழிநடத்தி வருகின்றார்.









