இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தாவின் புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









