நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவினால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில்,கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் முஹம்மத் ரஸூல்தீன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நேபாள மக்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் பிரார்த்திப்பதாக கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் முஹம்மத் ரஸூல்தீன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பிலுள்ள நேபாள தூதரகத்திற்கு விஜயம் செய்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கலைப் பதிவு செய்து கையெழுத்திட்டார்.










