2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 193 புள்ளிகளும், தமிழ் மொழி மூலம் 188 புள்ளிகளும் அதிகூடிய புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சிங்கள மொழி மூலம் 193 புள்ளிகளைப் பெற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, தமிழ் மொழி மூலம் அதிகூடிய 188 புள்ளிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (02) புதன்கிழமை வெளியிடப்பட்டன.









