பலாங்கொடை, பின்னவல – எல்லராவ பிரதேசத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
பலாங்கொடையில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மூன்று மாணவிகளும், மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து புறப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து, பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.









