முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான காலத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு டெம்பிள் ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அதேவேளை, KGF திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.









