கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறாது என கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் (CLS) அறிவித்துள்ளது.
மேலும், தற்போதைய நிலைமை காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும்.
நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் நீதிபதிகள் மேலதிக அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவார்கள் என CLS தெரிவித்துள்ளது.
இதனிடையே,
தடை உத்தரவுகளை நீடிப்பது தொடர்பான கோரிக்கைகள்(Enjoining Orders )நீடிப்பது தொடர்பான கோரிக்கைகள், பதிவாளரிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடம் ஸ்திரமற்ற நிலையில் இருக்கக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் நுழைய வேண்டாம் எனவும் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.நிலைமை தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும் போது அறிவிக்கப்படும் என CLS தெரிவித்துள்ளது.










