சபுகஸ்கந்த பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி இரு சிறுவர்கள் மீது மோதியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (29) மாலை பியகம – சபுகஸ்கந்த வீதியின் சமுர்த்தி மாவத்தை அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சபுகஸ்கந்த நோக்கி பயணித்த கார் ஒன்றின் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, வீதியை விட்டு விலகி மணல் நிறைந்த வீதியோரத்தில் நடந்து சென்ற இரு சிறுவர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மற்றைய சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கோனவல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









