இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா, கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் Trinbago Knight Riders (TKR) அணியுடன் இணையுவதற்காக கரீபியன் நோக்கிப் பயணித்து வருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குமாரா TKR அணியுடன் இணையவுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே, இங்கிலாந்தின் Hampshire அணிக்காக விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சிவப்பு பந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆட்சேபனையின்மைச் சான்றிதழ் (NOC) வழங்கப்படாததே இதற்குக் காரணமாகும்.வெல்லாலகேவுக்கு NOC வழங்கப்படாததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.
2026–27 பருவத்திற்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஒருவரான வெல்லாலகே, Hampshire அணியின் வெளிநாட்டு வீரராக இணைவதற்கு திட்டமிடப்பட்டிருந்தார். எனினும், NOC பிரச்சினை காரணமாக அவரது இங்கிலாந்து பயணம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.









