வேறுபாடுகள் இருந்தபோதிலும், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
தெஹ்ரானில் நடைபெற்ற 40ஆவது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் உரையாற்றிய அவர்,
“எந்தவொரு முஸ்லிம் நாட்டின் பிரதேசமும் மற்றொரு முஸ்லிம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடாது.”
எனத் தெரிவித்துள்ளார்.









