கத்தார் மற்றும் ஈரான் இடையே ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான “கூட்டுத் திட்டத்தை” நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கான பொருத்தமான சூழலை உருவாக்குவது குறித்தும் இரு நாடுகளும் கலந்துரையாடியதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.









