தெற்கு லெபனானின் நபதியே பகுதியில் உள்ள “ஹிஸ்புல்லாஹ்வின் உட்கட்டமைப்பை” குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவ வீரர்களை இலக்காகக் கொண்டு ஹிஸ்புல்லாஹ் இரண்டு வெடிகுண்டு ட்ரோன்களை ஏவியதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில், இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஹிஸ்புல்லாஹ்வின் “ஆயுதக் களஞ்சியங்கள்” இலக்காகக் கொள்ளப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது









