நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அவற்றுக்கு அருகில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏதேனும் இலங்கையர்களுக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் இயங்கும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்புகொள்ள முடியும்.
எவ்வாறாயினும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.








