சூடானில் இடம்பெற்று வரும் போரினால் இடம்பெயர்ந்து, எல் ஒபைட் நகரில் உள்ள அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
நகரின் முக்கிய நீர் ஆதாரங்களை துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகள் (RSF) இலக்கு வைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அகதி முகாம்களில் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான தண்ணீரைப் பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
போரினால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை, நீர் நெருக்கடியால் மேலும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அல் ஜசீராவின் செய்தியாளர் அல் மிக்தாத் அல் ருஹைத், எல் ஒபைட் நகரில் உள்ள அகதி முகாமொன்றிலிருந்து நிலைமையை அறிக்கையிட்டுள்ளார்.








