இஸ்ரேலிய தாக்குதலில் ஊடகவியலாளர் மரியம் தக்கா உள்ளிட்ட 22 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் மக்கள் ஒன்று கூடி அவர்களை நினைவுகூர்ந்துள்ளனர்.
காஸா மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் கடந்த ஆண்டு மரியம் தக்கா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை எவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.









