சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குப் பெறப்பட்ட பீடி இலைத் தொகையுடன், இரண்டு டிங்கி படகுகளும் லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வேல்லவீதிய கடற்கரைப் பகுதியில் 23.08.2026 காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த டிங்கி படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, லொறி மூலம் கொண்டு செல்வதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 2,276 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகை, டிங்கி படகுகள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு தெல்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








