சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,276 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் லொறி ஒன்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வேல்லவீதிய கடற்கரைப் பகுதியில் இன்று (23) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
டிங்கி படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள், லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதன்போது 2,276 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் லொறி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு தெல்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.









