கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 3 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (20) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 753 முழுமையான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது ஆகிய நோக்கங்களுடன் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.









