2026 யாலா பருவத்தில் அரசாங்கத்தால் நெல் கொள்முதல் செய்வதற்காக ரூ.7.5 பில்லியன் மேலதிக மதிப்பீட்டுக்கு இன்று (21) நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவினால் இந்த மேலதிக மதிப்பீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் மீதான விவாதம் இன்று நண்பகல் 12.30 மணி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.









