கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2027ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணையை வெளியிட்டுள்ளது.
2027ஆம் கல்வியாண்டு ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை கால அட்டவணைகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகள் மற்றும் பாடசாலை விடுமுறைகளும் இந்த அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனுடன், 2027ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை தினங்களின் பட்டியலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
















