இந்தோனேசிய குடியரசின் 81ஆவது சுதந்திர தினம், கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரக வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா தோபிங் தலைமையில் நடைபெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் கௌஷல்யா ஆரியரத்ன, தூதுவர்கள், முப்படைகளின் தளபதிகள், வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள், இலங்கை–இந்தோனேசிய நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
















