பாறைச் சரிவு காரணமாக கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இன்று காலை 6.00 மணி முதல் அந்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.









