

பெண்கள் மற்றும் தேவையுடைய ஏழைக் குடும்பங்கள், கணவனை இழந்த பெண்கள் அவர்களின் குழந்தைகள், நோயுற்று வருமானம் இல்லாமல் இருப்போர் என பல தரப்பினரதும் சமூக முன்னேற்றம், கல்வி, மனிதாபிமான சேவை மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய துறைகளில் நான்கு தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் YWMA (Young Women’s Muslim Association) அமைப்பின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீட்டு நிகழ்வும் நேற்று (02) கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள Grand Zenith மண்டபத்தில் YWMA அமைப்பின் தலைவி தேஷமான்ய பவாஷா தாஹா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலேசியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் (His Excellency Badli Hisham Adam) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் விசேட அதிதிகளாக உயர் ஸ்தானிகரின் துணைவியார், சட்டத்தரணி என்.எம்.ஸஹீட், கிரேண்ட் செனித் உரிமையாளர் மாஹிர் ஹாஜியார், கொழும்பு டைம்ஸ் தலைவர் மொஹமட் ரசூல்தீன், கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் , சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஊடகவியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன்போது நூல் விமர்சனத்தை சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் வழங்கினார். .
இந்நிகழ்வில், அமைப்பின் கடந்த 40 ஆண்டுகால சேவைகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பான பணிகள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்து
சட்டத்தரணி ஷஹீத், கிரேண்ட் செனித் உரிமையாளர் மாஹிர் ஹாஜியார், கொழும்பு டைம்ஸ் தலைவர் மொஹமட் ரசூல்தீன் ஆகியோர் உரையாறீறினர். இதன்போது பிரதம அதிதியின் விசேட உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைனால் எழுதப்பட்ட Our Growing Years எனும் அமைப்பின் நினைவு நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
சமூக சேவையில் பெண்களின் வகிபாகம், கல்வி மேம்பாடு மற்றும் பெண்களின் தலைமைத்துவ வளர்ச்சிக்காக YWMAஅமைப்பு கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் போற்றும் வகையில் வரலாற்று நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது நீண்ட காலம் சேவையாற்றியவர்களுக்கும் அதிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியர் நூருல் ஐன் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமையும். குறிப்பிடத்தக்கது.
ஏ.எஸ்.எம்.ஜாவித்
2026.08.02








