பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இக்கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









