மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர 14.07.2026 கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்திற்குச் சென்றிருந்தார்.
அங்கு கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட இரங்கல் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை எழுதிய அவர், இலங்கை மக்கள் மற்றும் சர்வஜன அதிகாரம் சார்பாக தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மற்றும் கட்டார் நாட்டிற்கு இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள், ராஜதந்திர ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பு குறித்தும் விசேடமாக நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் ஊடக செயலாளரும், சர்வஜன அதிகாரம் முஸ்லிம் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான ஹசன் அலால்தீன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.









