உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக இந்தத் தற்காலிக நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 17.06.2026 முற்பகல் 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 13 மணிநேரத்திற்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
இக்காலப்பகுதியில் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.









