தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
09.06.2026 குறித்த உணவகத்தில் தீ பரவியுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபைக்குச் சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








