இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் 1.6 சதவீதத்தால் அதிகரித்து 6,873 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகை 6,766 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஏற்பாட்டின் மூலமான நிதியும் இதில் உள்ளடங்குவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.








