2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ சம்புத்த தெமங்களவை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் வெசாக் புண்ணிய மஹோற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ என கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி அமைச்சரவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதற்கமைய, அகில இலங்கை சாசனாரக்சக சபையின் வழிகாட்டலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பௌத்த விவகாரத் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வெசாக் உற்சவத்தை நாடு முழுவதும் மிக விமரிசையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெசாக் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த விபரங்களை அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு: வேலைத்திட்டங்கள்










