இஸ்மதுல் றஹுமான்
10 கோடி 55 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து
வெளியே எடுத்துச் சென்ற தாதி மாணவி உட்பட இரண்டு இலங்கை விமானப் பயணிகள் 18ம் திகதி அதிகாலை வேளையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் எயர்வேஸ் விமான சேவையின் ரிஜி-307 இலக்க விமான மூலம் 18 ஆம் திகதி அதிகாலை 01.00 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இருவரும் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்திய விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவர்கள் கொண்டுவந்த பயணம பொதிகளை பரிசீலித்தனர்.
அப்போது 8 பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் 552 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் ஹக்மன, கங்கொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது வர்த்தகர். மற்றயவர் அகுனுகொலபெலஸ்ஸ ஜதுரவைச் சேர்ந்த தனியார்
பல்கலைக்கழகத்தில் தாதி கற்க
நெறியை பயிலும் 22 வயது மாணவியாவர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெற்று தடுத்து வைத்து விசாரிக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.










