ஏ.எஸ்.எம்.ஜாவித் 2026.03.12
கொழும்பு கோட்டை ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் விசேட இப்தார் நிகழ்வு 11.03.2026 டொக்டர் அல்-ஹாஜ் எம்.என்.எம்.அஸீம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் விசேட அதிதிகளாக லங்காராமய விஹாரையின் பிரதான விஹாராதிபதி மத்துரட்ட தம்மாலந்த தேரர்இ கொழும்பு-15 ஸ்ரீ பத்தரகாளி அம்மன் ஆலய பிரதம குருக்கள் வர்ணன் உதயகுமார் சர்மா குருக்கள்இ புத்தசாகனஇ மத மற்றும் சலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் நிமால் ரத்நாயக்க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி. உள்ளிட்ட பல உலமாக்கள்இ பள்ளிவாசலின் செயலாளர் சிப்லி ஹாசிம் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள்இ அரச அதிகாரிகள்இ பொதுமக்கள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விசேட பயானை இந்தியாவைச் சேர்ந்த அல்-ஹாபிழ் மௌலவி ஏ. முஸ்தபா பஹருள் உலூம் நிகழ்த்தினார். துஆப் பிரார்த்தனையை டொக்டர் மௌலவி எம்.எம்.அப்துல்லாஹ்இ(நூரி) வழங்கினார்.









