2026/02/20 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிலே புத்தளத்தை சேர்ந்த, இந்து மத்திய கல்லூரியில் கல்வி கற்ற, சன்முகராசா காருண்யா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு துறையில் அதி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதற்காக
- The Sri Lanka and Australia Chamber of Commerce (SLACC)
- The Institute of Chartered Accountants of Sri Lanka
- The Association of Chartered certified Accountants
- The Certified Management Accountants (CMA) Australia
- The Charted Institute of Securities and Investment – UK
ஆகிய 5 பதக்கங்களை பெற்று புத்தள மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது புத்தள இளந்தலைமுறைக்கு மிக சிறந்த உந்து சக்தியாகும்.










