ஏ.எஸ்.எம்.ஜாவித் 2026.02.22
சில நாட்களாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் கேஸ் போதியளவு இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் பல கேஸ் விற்பனை முகவர் நிலையங்கள் மூடப்பட்டும் சில கடைகளில் கேஸ் இல்லை என்ற வாசகங்களை எழுதி ஒட்டியுள்ளனர்.
இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக இஸ்லாமியர்களின் நோன்பு காலமாக இருப்பதால் கேஸ் தட்டுப்பாடு பல அசெளகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதையும் காண முடிகின்றது.









