இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் இலங்கையிலுள்ள பக்தர்கள் குஜராத் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்புக் கிடைக்கும்” என்றார்.










