
இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு பிரதேச செயலக வளவில் இலங்கையின் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். கெளரவ அதிதியாக பங்கேற்று நீர்கொழும்பு மேயர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த, பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாரச்சி ஆகியோர்களும் உரையாற்றினார். சர்வமதத் தலைவர்களின் ஆசிர்வாத உரையும் இடம் பெற்றன. பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்து மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக சேவா இயக்கங்களில் இருந்தும் குழுக்களாக
தேசாபிமான கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் தமிழ் பேசும் ஊழியர்கள் ஒன்றினைந்து தமிழில் கீதம் இசைத்தனர். 78வது சுதந்திர தின நினைவாக மரக்கன்றும் நாட்டப்பட்டது.










