

சில்மியா யூசுப்
கொழும்பு — கொழும்பிலுள்ள வியட்நாம் தூதரகம், 2026 ஆம் ஆண்டிற்கான வியட்நாமிய புத்தாண்டான “பின் ந்கோ” “Binh Ngo”
விழாவை ஜனவரி 31, சனிக்கிழமை, கொழும்பு Cinnamon Lakeside ஹோட்டலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு வியட்நாம் தூதர் திரிஞ் தி ட்ராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தூதர், இந்த ஆண்டு சக்தி, திடமான மனப்பாங்கு மற்றும் முன்னேற்ற ஆவலைக் குறிக்கின்றது என்றும், மேலும் இது ஒரு வியட்நாமில் மிக முக்கியமான பண்டிகையாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வியட்நாம் இலங்கை நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், வர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம் மற்றும் கலாசாரத் துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் வாழ்ந்து, கல்வி கற்று, பணியாற்றி வரும் வியட்நாமிய சமூகத்தினரின் பெரும் பங்கேற்புடன் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
Colombo Times பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்தீன் போட்டிகளின் நடுவர் குழுவில் ஒருவராக பணியாற்றியதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஊடகவியலாள்ர்கள் , வியட்நாம் தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.










