இஸ்மதுல் றஹுமான்
பொலிஸாரால் தாக்கப்பட்ட கத்தோலிக்க பிதா நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட ஆறு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தழுகம, திப்பிட்டிகொட கத்தோலிக்க தேவஸ்தானத்திற்கு பூசைக்காக சனிக்கிழமை மாலை தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் வைத்து எதிர்திசையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பொலிஸார் இவரை பின் தொடர்ந்து வந்து வாகணத்தை நிறுத்தச்
சொல்லியும் நிறுத்தாமல் வந்தகக் கூறி நான்கு பொலிஸார் தகாத வார்த்தைகளில் ஏசி தலைக்கவசத்தாலும் கால்களாலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சீதுவ பண்டாரவத்தையைச் சேர்ந்த கொழும்பு மறைமாவட்ட பங்குத் தந்தை மிலான் பியதர்ஷன பிதா நீர்கொழும்பு வைத்தியசாலையில் 7ம் வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை பார்வையிடுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உதவி பேராயர் மெக்ஷிவல் சில்வா, தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுட் கிரிஷாந்த பிரனாந்து பிதா, கத்தோலிக்க பாதரிகள் மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டோர் வைத்தியசாலைக்கு வந்திருந்தனர்.
மிலான் பியதர்ஷன பிதாவை நலன் விசிரித்த பின்னர் தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுட் கிரிஷாந்த பிரனாந்து பிதா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் 24ம் திகதி சனிக்கிழமை இரவு 7மணியளவில் கண்டி வீதியில் வைத்து மிலான் பிதவை பொலிஸார் தாக்கியுள்ளனர்.
தழுகம, திப்பிட்டிகொட கத்தோலிக்க தேவஸ்தானத்திற்கு பூசைக்காக தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எதிர் திசையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பொலிஸார் திரும்பி இவரை பின் தொடர்ந்து வந்து வாகணத்தை நிறுத்தக் நிறுத்தக் கூறியும் நிறுத்தாமல் வந்ததாக கூறி தூசன வார்தைகளால் பேசி ஹெல்மட்டாலும் கால்களாலும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். அவர் தான் கத்தோலிக்க பிதா என்றும் அதற்கான அடையாள அட்டையை காண்பித்தும் லோகுகாரர்களாலும் சிவுரக்காரர்களாளும்தான் இலங்கைக்கு வினை எனக்கு கூறி நான்கு பொலிஸார் மீண்டும் தாக்கியுள்ளனர். உடலிலும், அணிந்திருந்த லோகுவிலும் அடையாளங்கள் உள்ளன. அதனைக்கண்ட சாட்சிகளும் எள்ளன என்றார். பிதா மேலும் தெரிவிக்கையில் தாக்கப்பட்ட பிதா தனது வீட்டிற்கு வந்து அங்கிருந்து உறவீனருடன் சீதுவ வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வந்துள்ளார். இந்த தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். கத்தோலிக்க பிதா ஒருவரை தாக்கிய முதல் சம்பவம் இது.
கத்தோலிக்கர் என்ற முறையில் மன்னிக்கும் மணப்பாங்கு உள்ளது.
ஒரு சிலரால் செய்த இந்த செயல் முழு பொலிஸாருக்கு பாதிப்பாகும். இலங்கைக்கு ஒரு கரும்புள்ளியாகும்.
நியாயமான விசாரணை நடாத்தி உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டத்த்துறையுடன் தொடர்புடைய சகலரையும் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறோம். அப்படிச் செய்தால்தான் ஏனையவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்.
இச் சந்தர்பத்தில் கத்தோலிக்க மக்களை அமைதியாக இருக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸிரையும் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளதாக கம்பஹ பொலிஸார் தெரிவித்தனர்.










