நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 2025 ஆம் ஆண்டிலேயே அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து நேற்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் இந்த அளவு கடந்த ஆண்டில் 23,692 கிலோகிராம் 307 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், இது (2024 உடன் ஒப்பிடுகையில்) சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










