இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு பிரதேச செயலகம் 15 வருடமாக நடாத்திய தைப் பொங்கல் விழா 21 ம் திகதி செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ரசிகா மல்லவாரச்சி தலைமையில் இடம் பெற்றது. நீர்கொழும்பு பிரதேச செயலகம் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த தைப் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன கலந்து சிறப்பித்ததுடன் கெளரவ அதிதிகளாக நீர்கொழும்பு மேயர் சட்டதரணி ரொபட் ஹீந்கெந்த, கம்பஹா மாவட்ட மேலதிக செயலாளர் ஏ.ஜே. கித்சிறி, நீர்கொழும்பு இறைவரி திணைக்கள ஆணையாளர் டீ.ஜி.எஸ். துஷார ஆகியோர் பங்குபற்றினர்.
விஜயபால மென்டிஸ் சர்வதேச பெளத்த நிலையத்தின் தலைமை பிக்கு தெல்வள அங்கிரச தேரர், சாந்த சரியா தேவஸ்தான பங்குத்தந்தை எத்தனி நிஷான் பிதா, கடற்கரைத் தெரு சித்தி விநாயகர் கோவில் கிருபாகரன் குருக்கள், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் பேர் இமாம் மெளலவி சாதாத் ஆகிய சர்வமதத் தலைவர்களும் வருகை தந்து ஆசியுரை வழங்கினர்.
இந்து இளைஞர் மன்றம் சார்பாக அதிதிகள் பொன்னாடை போர்த்தி கெறரவிக்கப்பட்டனர்.
பெளத்த, கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்கள், அதிதிகள் மற்றும் இந்து மன்ற உறுப்பினர்கள் பொங்கல் பானைக்கு அரிசி போட்டனர்.
பிரதேச செயலக ஊழியரான தர்ஷி மற்றும் சமய பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் செயலக பிரிவு குறுக்கே லேயே இடம்பெற்ற கோலம் நிர்மானப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.










