

எஸ்.எம்.ஜாவித் 2026.01.11
சவுதி அரேபிய தூதரகம் 3வது தடவையாகவும் தேசியமட்ட அல் குர்ஆன் மனனப்போட்டியை இலங்கையில் நடாத்தி அதன் இறுதிப் போட்டியை இன்று (11) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள என் எச் கலெக்சன் கோட்டலில் நடாத்தியது.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து 4 பிரிவுகளாக ஏற்பாடு செய்த இறுதிப் போட்டிகள் போட்டியில் சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருநிதனர்.
இலஙைகைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கிலானியின் வழி நடத்தலில் தூதரகத்தின் கலாசாரப்பிரிவுப் பொறுப்பாளர் பத்ர் அல் அனர்ஜி, தூதரகத்தின் கணக்காளர் , அக்கீல் அபூகூத், உள்ளிட்ட தூதரகத்தின் உயர் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டிகளில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு பெறுமதியான பணப்பரிமாற்றம் வழங்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.










