ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக கடல் அலைகள் 1 மீற்றர் (39 அங்குலம்) வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையும் அதே பிராந்தியத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.










