நாடு தழுவிய விவசாய வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாயிகள் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி,இன்று நாடு முழுவதும் உள்ள விவசாய காணிகளில் பயிர்ச்செய்கை, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விலகப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கோரிய நிலையில் அதற்கு அரசாங்கத்திடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், விவசாயிகள் குரல் அமைப்பு இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் விளைவாக, வார இறுதியில் சில பொருளாதார மையங்களில் கடுமையான நெரிசல் காணப்பட்டதுடன், மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது










