கலந்து கொள்ள அனைவருக்கும் திறந்த அழைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கரைவாகுப்பற்று கிழக்குக் கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்குக் கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை (05) பிற்பகல் 3.30 மணிக்கு, சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திலுள்ள கலாசார மத்திய நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நலனில் பாரிய நன்மை பயக்கும் இத்திட்டம் பற்றிய முக்கியமான இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அரசிலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
சாய்ந்தமருது அல் அமான் சமூக நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில்,துறைசார் அதிதிகள் மற்றும் மேற்படி கண்டங்களின் வட்டவிதானைமார்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் இவ்வைபவத்தில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.










