2025 எழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி கிண்ண தொடரில் மூன்றுவாது இடத்திற்காக 19.10.2025 மாலை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்திற்கான தீர்க்கமான போட்டியில் சீனாவை 19-14 என்ற கணக்கில் தோற்கடித்து இந்த வெற்றியை பதிவு செய்தது.
அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, அரையிறுதியில் வலுவான ஜப்பானிடம் 12-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டது.
இதன் விளைவாக, இலங்கை மூன்றாவது இடத்திற்காக விளையாட வேண்டியிருந்தது.
இந்தப் போட்டி கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் இடம்பெற்றது.










