ஏ.எஸ்.எம்.ஜாவித்
அன்மையில் இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் முஸ்லிம் லீக் தலைவரும் ரிச்சி முறை ஆலோசகருமான புதிய நிலா மு ஜஹாங்கீர் நல்லென்ன அடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி சபாநாயகருமான டொக்டர் றிஸ்வி சாலிஹ் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார் .
இந்த சந்திப்பில் தற்போதைய அரசின் நல்ல செயல்திட்டங்களை பாராட்டி பேசியதுடன் இன ஒற்றுமை கட்டாயம் தேவை என்பதையும் இலங்கையில் சகல மக்களும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்பதை தெரிவித்த ஜஹாங்கிர் அவர்கள் உங்களைப்போன்றவர்கள் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது சிங்கபூரின் அரசியல் மற்றும் சமுக விடயங்களையும் பிரதி சபாநாயகர் கேட்டறிந்து கொண்டார்.
சந்திப்பின்போது ஜஹாங்கிர் அவர்கள் பிரதி சபாநாயகருக்கு அவரின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.










