ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.10.30
கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் 20வது வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 10 இல் உள்ள அல்-ஹிதாயா கல்லூரியின் எம்.சி.பஹர்டீன் மண்டபத்தில் மத்ரஸாவின் அதிபரும் ஆலோசகருமான மௌலவி எம்.எம்.எம்.ரயிசுதீன் (தீனி) தலைமையில் இடம்பெற்றது.
அல் மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் தலைவர் ஜஹாங்கிர் அலி உள்ளிட்ட நிருவாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக அல் மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் போசகர்களான அல் ஹாஜ் பிறோஸ்டீன் மொஹமட், அல் ஹாஜ் எஸ்.எச்.ஏ.வஹாப் ஆகியோர் கலந்து கொண் டிருந்தனர்.
விஷேட பேச்சாளராக கொழும்பு 12 மதீனதுல் இல்ம் அறபிக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எப். அப்துல் அஸீஸ் (கில்றி,மஸாஹிரி) உட்பட பல விஷேட அதிகள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து சிறப் பித்தனர்.
இதன்போது மாணவர்களின் இஸ்லாமிய ஹஸீதா, இஸ்லாமிய கீதங்கள், மூன்று மொழிகளிலுமான மாணவர்களின் பேச்சுக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மத்ரஸாவினால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் என்பன வழங்கப்பட்டதுடன் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் மத்ரஸா அதிபர் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













